முதியோர் மருத்துவம்


சிக்கலான மருத்துவ அல்லது சமூகப் பிரச்சினைகள் கொண்ட முதிய நோயாளிகளிகளின் நோய்கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் சிறப்புத் திறன்வாய்ந்தது மணிப்பால் மருத்துவ மனையின் ஜெரியாட்ரிக் மருத்துவத் துறை. தனிநபர் சுதந்திரத்தைப் பேணுவதோடு நோயாளிகளுக்கு வாழ்வின் தரத்தை மேம்படுத்தும் வகையில் மணிப்பாலில் நாங்கள் ஒட்டுமொத்த முதியோர் பராமரிப்புத் திட்டங்களை உருவாக்குகிறோம். எங்கள் கிளினிக்கல் மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளின் ஒரு முக்கியமான கூறு முதுமைமறதிப் பராமரிப்பில் உள்ளது.

OUR STORY

Know About Us

Why Manipal?

முதியவர்களைப் பராமரிக்கும்போது ஜெரியாட்ரிக்ஸ் மருத்துவத்தில் ஒரு குழு அணுகுமுறை தேவை என்பதை நாங்கள் மணிப்பாலில் புரிந்துவைத்திருக்கிறோம். நாங்கள் குடும்பத்துக்கும் பராமரிப்பு அளிப்பவர்களுக்கும் ஆதரவு அளிக்கிறோம். பிசிக்கல் தெரப்பிஸ்டுகள், செவிலியர்கள், நியூட்ரிஷனிஸ்டுகள், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்டுகள், சமூகப் பணியாளர்கள், பேச்சு மற்றும் கேள்திறன் நிபுணர்கள் மற்றும் உளவியல் ஆலோசகர்கள் மணிப்பாலின் சிறப்புக் குழுவில் அடங்குவர். ஒரு திட்டத்தை வடிவமைக்கும்போது மணிப்பால் முதியோர் மருத்துவக் குழு, முதியவர்களின் சமூக, உணர்வு மற்றும் மருத்துவத் தேவைகளை கருத்தில் கொள்ளும் அதே வேளையில் அவர்களுடைய முன்னுரிமைகளையும் மதிப்புகளையும் கவனத்தில் கொள்ளுகிறது. நினைவாற்றல் பிரச்சினைகள், விழுதல், சிறுநீரை அடக்கமுடியாமை, மருந்துகள் மற்றும் பல நீடித்த கோளாறுகளின் மேலாண்மை ஆகிய ஆரோக்கிய பிரச்சினைகளில் சிறப்புக் கவனம் செலுத்துகிறோம்.

 

பல நோய்கள் அல்லது மருத்துவக் கோளாறுகளால் பாதிக்கபப்ட்டிருக்கும்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மணிப்பால் மருத்துவமனையில் நாங்கள் அனுபவம் பெற்றுள்ளோம். பல வகையான கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எங்கள் நிபுணர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். இவற்றில் அடங்கும் சில: சுவாச நோய்கள், நரம்பு நோய்கள், இருதய நோய், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் நீரிழிவு நோய்.

சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதல் கொள்கை. மணிப்பால் மருத்துவமனைகள் வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஒரு முழுமையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தி தனிப்பட்ட அளவில் விரிவான பராமரிப்பை வழங்குகின்றன. நோயாளியின் வாழ்வியல் தரத்தைப் பராமரித்து மேம்படுத்தும் அதே வேளையில் பல்வேறு வகையான கோளாறுகளைக் குணப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட மருத்துவ பராமரிப்புத் திட்டங்கள் இதில் அடங்கும்.

சிறப்பு சிகிச்சைகள்.ஜெரியாட்டிக் துறை டெமென்ஷியா ஹாஸ்பிடலைசேஷன் திட்டங்கள் மற்றும் நினைவாற்றல் இழப்பை மதிப்பிடுவதற்கான சோதனைகள் குறித்துக் குறிப்பாகக் கவனம் செலுத்துகிறது. பல உறுப்பு செயலிழப்பு நோய்க்குறி ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மணிப்பால் மருத்துவமனைகள் நிபுணத்துவம் பெற்றுள்ளன.

கார்டியோவாஸ்குலர் நோய் - ஆர்டெரியோஸ்கிளிரோசிஸ்

சிக்கலான கார்டியோவாஸ்குலர் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு சரியான பராமரிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு மேலாண்மை செய்யப்படுகிறது, வாஸ்குலர் கால்சிஃபிகேஷனுக்கான மருத்துவ அணுகுமுறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஆர்ட்டீரியோஸ்கிளியரோசிஸ் நோயுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்ட வயதான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதோடு அவர்களின் நிலை குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

சுவாச நோய்கள்

ஆஸ்பிரேஷன் நிமோனியா நோயாளிகளுக்கு ஸ்வாலோயிங் ரிஹேபிலிட்டேஷன்  வழங்கப்படுகிறது. தூக்கத்தில் மூச்சுத்திணறல் நோய்க்குறி கொண்ட நோயாளிகளுக்கு ஸ்லீப் பாலிசோம்னோகிராபி செய்யப்படுகிறது. நேசல் கன்டினுயஸ் பாசிட்டிவ் ஏர்வே  பிரஷர் சிகிச்சையும் பயன்படுத்தப்படுகிறது.

நரம்பியல் நோய்கள்

புறநோயாளிகளுக்கான மணிப்பால் மருத்துவமனையின் நினைவாற்றல் இழப்புக் கிளினிக்கில் பொதுவாக அல்சைமர் மற்றும் டெமென்ஷியா கோளாறுகள் உள்ள வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. தனிநபர்களுக்குப் பொருத்தமான சிகிச்சைத் திட்டங்களை வழங்குவதற்காக இந்தக் கோளாறுகளைப் பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து எங்கள் நிபுணர்கள் ஆய்வு செய்து புரிந்து கொள்ளுகின்றனர்.

நீரிழிவு மற்றும் எலும்பு நோய்

நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பிற வாழ்க்கை முறை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலும்பு அடர்த்தி அளவீட்டு முடிவுகளின் அடிப்படையில் மணிப்பால் மருத்துவமனை சிகிச்சை அளிக்கிறது. இந்த நோயாளிகளின் சிகிச்சைக்காகக் கைக்கொள்ளப்படும் அணுகுமுறை, அடிப்படை மற்றும் கிளினிக்கல் மெடிசன் இரண்டையும் ஒருங்கிணைக்கிறது.பாலின அடிப்படையிலான மருத்துவம்.

Facilities & Services

பின்வரும் கோளாறுகளால் பாதிக்கபப்ட்டுள்ள நோயாளிகளுக்கு மணிப்பால் மருத்துவ மனையின் ஜெரியாடிக் மருத்துவத் துறை நன்மைகளை அளிக்கிறது:

● பல்வேறு மருத்துவக் கோளாறுகள்

● வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சிரமம்

● பாலி பார்மசி – பல்வேறு மருந்துகளை உட்கொள்ளுதல்

● உறங்குவதில், நடப்பதில் சிரமம், சமநிலை இன்மை

● நினைவாற்றல் பிரச்சினை

● அடிக்கடி விழுதல் அல்லது அதுகுறித்த பயம்

● தொடர் சிறுநீர் தொடர்பான பிரச்சினை

● எடை இழப்பு

● மலச்சிக்கல்

● புற்றுநோய் & முதியோர்க்கு நோய்த்தடுப்பு

மதிப்பீடுகள் நோயாளிக்கு மருத்துவம் அளிப்பதில் ஜெரியாட்ரிக் அசெஸ்மெண்ட்தான் எப்போதும் முதல் படியாகும். இந்த மதிப்பீடு முதியோர் சிகிச்சை மருத்துவருக்கு தொடர் வளர்ச்சிகளைக் கண்காணிக்கும் ஒரு அடிப்படையை வழங்குகிறது.

FAQ's

The geriatric specialist will first gather general information about the patient's health, review the patient's medical history, and conduct a physical examination. Based on the doctor’s findings, further treatment or diagnostic procedures are recommended.

The most common conditions are hearing loss, refractive errors, cataracts, neck and back pain and osteoarthritis, pulmonary disease, diabetes, chronic obstructive pulmonary disease, dementia, and depression. To take care of your health, visit our geriatric medicine hospital in Bangalore.

The greatest cause of disability is sensory impairments, neck and back pain, depressive disorders, diabetes, dementia and osteoarthritis. Visit our best geriatric hospital in Old Airport Road Bangalore to have the best treatment.

Some illnesses are caused due to genetic factors while some conditions are caused due to environmental conditions. Each individual is different and there is no ‘typical’ geriatric patient. Some may have the mental and physical capacities of 20 year olds while others suffer from significant decline in mental and physical capacities at a much younger age. Conditions can be treated and managed and not all conditions can be prevented. Visit Manipal Hospitals, the geriatric hospital in Bangalore to consult with the experts.

Yes, yearly health checkups and discussions with your doctor about other risk factors should never be overlooked. It is important to keep track of your health at an elderly age.

நியமனம்
சுகாதார சோதனை
வீட்டு பராமரிப்பு
எங்களைத் தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள
review icon எங்களை மதிப்பாய்வு செய்யவும்
எங்களை அழைக்கவும்